அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. அதேபோல, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வருகிற 20-ந்தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com