டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல் இந்த புயலால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் டெல்லியில் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் சில மணிநேரங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com