காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ.
காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
Published on

கின்ஷாசா,

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும்.

பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,945 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது.

காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com