தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதான தர்மமுனீஸ்வரனின் காவல் காலம் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தர்மமுனீஸ்வரனுக்கு உடல்தகுதி பரிசோதனை நடைபெற்றதை அடுத்து அவரை போலீசார் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.