2வது டி20 போட்டி; பின் ஆலென் அதிரடி...நியூசிலாந்து 194 ரன்கள் குவிப்பு...!

நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலென் 74 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஹாமில்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கான்வே மற்றும் ஆலென் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வில்லியம்சன் 26 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலென் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 74 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் மிட்செல் 17 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து க்ளென் பிலிப்ஸ் உடன் மார்க் சாம்ப்மென் ஜோடி சேர்ந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com