2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இன்று மோதல்

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இன்று மோதல்
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று நடைபெற உள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீசும், தொடரை சமன் செய்ய பாகிஸ்தானும் முயற்சி செய்யும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com