

பிரிட்ஜ்டவுன்,
4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4-வது ஒருநாள் போட்டி இன்று பார்படாஸ், பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க வீரர் அகீம் ஆகஸ்டே 33 ரன்கள் எடுத்து அவுட்டாக மிடில் ஆர்டரில் அமீர் ஜாங்கூ பொறுப்புடன் விளையாடி 73 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் குடாகேஷ் மோட்டி 56 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி உள்ளது.