கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்ற 7 பேர் கைது

பெங்களூரு-சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்ற 7 பேர் கைது
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் நேற்று முன்தினம் பெங்களூரு-சென்னை அணிகள் மோதின. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை சின்னசாமி மைதானத்தின் அருகே சிலர் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமி மைதானத்தின் அருகே சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7 பேர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ஐ.பி.எல். டிக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் ஜெகதீஷ், சத்யநாராயணா, ஹர்ஷா, வினய், ஷாகித், லிகித், புனித் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கப்பன் பூங்கா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கப்பன் பூங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com