சிக்சர் மழை பொழிந்த பின் ஆலென்... வாஷிங்டன் அணியை வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்

image courtesy: @MLCricket / @SFOUnicorns
எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கியது.
கலிபோர்னியா,
எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 269 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் சிக்சர் மழை பொழிந்த பின் ஆலென் 51 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதில் 19 சிக்ஸ் அடங்கும்.
தொடர்ந்து 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வாஷிங்டன் ப்ரீடம் அணி 13.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 123 ரன் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ அணி அபார வெற்றி பெற்றது.
வாஷிங்டன் அணி தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 42 ரன் எடுத்தார். சான் பிரான்சிஸ்கோ தரப்பில் ஹாரிஸ் ரவூப், ஹசன் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த தொடரில் நாளை நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.






