சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

லாகூர்,

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடருக்கான அணிகளை பாகிஸ்தான் தவிர மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஹரிஸ் ரவுப், ஷாகீன் அப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:

முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், பகர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா மற்றும் ஷாகீன் அப்ரிடி.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com