கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
Published on

பிரிட்ஜ் டவுன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இத்தொடரில் 4 போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதில் 3-1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸ் நாட்டின் பிரிட்ஜ் டவுன் நகர மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

269 ரன்கள் இலக்கு

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 69 ரன்களையும், நிக் கெலி 64 ரன்களையும் குவித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப், விட்டல் லாவிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com