பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி
Published on

தரோபா,

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தரோபாவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் தொடர்ச்சியாக 5 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வித்தியாசமான சாதனை படைத்தார்.

முகமது அப்பாஸ் - 5 விக்கெட்டுகள்

பின்னர் 29 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 54.5 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பாபர் அசாம்

இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 4-வது நாளான நேற்று 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந் து 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் பாபர் அசாம் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

90 ரன்கள் வித்தியாசத்தில்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும், ரோச், கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com