ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: @IPL 
Image Courtesy: @IPL 
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் மாபெரும் சாதனை பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலியை பின்னுக்கு தள்ளி உள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை (19 விருதுகள்) பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா (20 விருதுகள்) 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்தப்பட்டியலில் டி வில்லியர்ஸ் (25 விருதுகள்) முதல் இடத்திலும், கிறிஸ் கெயில் (22 விருதுகள்) 2வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 4வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர், எம்.எஸ்.தோனி (தலா 18 விருதுகள்) ஆகியோர் 5வது இடத்தில் உள்ளனர்.

அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல்:

டி வில்லியர்ஸ் - 25

கிறிஸ் கெயில் - 22

விராட் கோலி - 19

டேவிட் வார்னர் - 18

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com