மேஜர் லீக் கிரிக்கெட்: வாஷிங்டனை வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ்

டாஸ் வென்ற வாஷிங்டன் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மேஜர் லீக் கிரிக்கெட்: வாஷிங்டனை வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ்
Published on

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

192 ரன்கள்

இதில், டாஸ் வென்ற வாஷிங்டன் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆண்ட்ரே பிளட்சர் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வாஷிங்டனை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய லாஸ் ஏஞ்சல்ஸ் வீரர் ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com