மேஜர் லீக் கிரிக்கெட்: லாஸ் ஏஞ்சல்சை வீழ்த்திய நியூயார்க்

லாஸ் ஏஞ்சல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
மேஜர் லீக் கிரிக்கெட்: லாஸ் ஏஞ்சல்சை வீழ்த்திய நியூயார்க்
Published on

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின.

நியூயார்க் வெற்றி

இதில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மேத்தியூவ் திரம்ப் 44 ரன்களும், ஹோல்டர் 43 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூயார்க் 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய நியூயார்க் அணியின் போலார்டு 63 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com