

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கலிபோர்னியாவில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.