மேஜர் லீக் கிரிக்கெட்: நியூயார்க்கை எளிதில் வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ

நியூயார்க் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மேஜர் லீக் கிரிக்கெட்: நியூயார்க்கை எளிதில் வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ
Published on

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

எம்.ஐ. நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ்

இந்நிலையில், இத்தொடரில் கலிபோர்னியாவில் இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய சான் பிரான்சிஸ்கோ அணியின் கேப்டன் மேத்திவ் ஷாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 16.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் எம்.ஐ. நியூயார்க்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய மேத்திவ் ஷாட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com