

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, இத்தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, இன்று நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ், வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் அண்ட்ரிஸ் குஸ் 73 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சான் பிரான்சிஸ்கோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாஷிங்டன் அபார வெற்றிபெற்றது. அதேவேளை, சிறப்பாக ஆடிய சான் பிரான்சிஸ்கோ கேப்டன் மேத்திவ் ஷாட் 121 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தபோதும் அந்த அணி தோல்வியடைந்தது.
சான் பிரான்சிஸ்கோவை வீழ்த்திய வாஷிங்டன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வாஷிங்டன் பிரிடம் அணி எதிர்கொள்ள உள்ளது.