

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, இத்தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ், வாஷிங்டன் பிரிடம் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வாஷிங்டன் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்சை எதிர்கொள்ள உள்ளது.