மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாசை வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ்

டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாசை வீழ்த்திய லாஸ் ஏஞ்சல்ஸ்
Published on

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மோதல்

இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் (30வது ஆட்டம்) இன்று நடைபெற்றது. இதில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

அமெரிக்காவின் டெல்லஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய டெக்சாஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய சுபர் ரஜனி 51 ரன்கள் சேர்த்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி

இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெக்சாசை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் தொடக்க வீரர் காலின் மன்ரோ 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com