

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் (30வது ஆட்டம்) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
அமெரிக்காவின் டெல்லஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், சியாட்டில் ஓர்காஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.