

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் பிரிடம் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 19.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிளட்சர் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் வீரர் பென் வார்ஷஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வாஷிங்டன் பிரிடம் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.