மேஜர் லீக் கிரிக்கெட்: சியாட்டிலை வீழ்த்திய நியூயார்க்

டாஸ் வென்ற சியாட்டில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மேஜர் லீக் கிரிக்கெட்: சியாட்டிலை வீழ்த்திய நியூயார்க்
Published on

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

நியூயார்க் - சியாட்டில் மோதல்

இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் - சியாட்டில் ஓர்காஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சியாட்டில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூயார்க் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தஜிந்தர் அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்தார்.

நியூயார்க் வெற்றி

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சியாட்டிலை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய நியூயார்க் அணியின் ஷெபர்டு , போலர்டு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com