எதிரணி வீரரிடம் ஆலோசித்து டி.ஆர்.எஸ் எடுத்த முகமது ரிஸ்வான் - வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
Image Grab On Video Posted By @cricketcomau
Image Grab On Video Posted By @cricketcomau
Published on

அடிலெய்டு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான் 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரம் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 164 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 10ம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 34 வது ஓவரை பாகிஸ்தானின் நசீன் ஷா வீசினார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா மற்றும் ஹேசில்வுட் களத்தில் இருந்தனர். அப்போது 34வது ஓவரின் 4வது பந்தை ஆடம் ஜாம்பா எதிர்கொண்டார்.

அந்த பந்து பவுன்சராக ஆடம் ஜாம்பாவின் தலைக்கு மேல் சென்றது. அது பேட்டில் பட்டதாக விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அப்பீல் செய்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். இதையடுத்து டி.ஆர்.எஸ் எடுக்க நினைத்த பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான், ஆடம் ஜாம்பாவிடம் டி.ஆர்.எஸ் எடுக்கலாம என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஆடம் ஜாம்பா கண்டிப்பாக எடுக்கலாம் என கூறினார். டி.ஆர்.எஸ் முடிவில் அடுது நாட் அவுட் என வந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com