வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி வருகிற 31-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி வருகிற 31-ம் தேதியும், 2-வது போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதியும் நடைபெற உள்ளது.

டி20 போட்டிகள் முடிவடைந்த உடன் ஒருநாள் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 8-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் செயல்பட உள்ளனர்.

பாகிஸ்தான் அணிகள் விவரம்:

டி20 அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுப்யான் மோகிம்

ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா (துணை கேப்டன்), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசம், பஹீம் அஷ்ரப், பக்கர் ஜமான், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, சைம் அயூப், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுப்யான் மோகிம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com