

வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
மேத்திவ் ஷாட் தலைமையிலான சான் பிரான்ஸ்கோவும், மார்கஸ் ஸ்டாய்னஸ் தலைமையிலான சியாட்டில் அணியும் மோத உள்ளதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.