2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது
 
2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.

2வது டெஸ்ட்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று நடைபெற உள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

டாஸ்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக சந்திரபால், பிரண்டன் கிங் களமிறங்க உள்ளனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீசும், தொடரை சமன் செய்ய பாகிஸ்தானும் முயற்சி செய்யும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com