அதிரடியால் மீண்டும் மிரள வைத்த சூர்யவன்ஷி: ஒரே நாளில் படைத்த சாதனைகள்

நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தினால் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

image courtesy: Rajasthan Royals/ @rajasthanroyals
image courtesy: Rajasthan Royals/ @rajasthanroyals
Published on

இளங்கன்று பயமறியாது என்று சொல்வது போல 15 வயதே ஆன சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் பேட்ஸ்மேன்களை மிரட்டும் பந்து வீச்சாளர்களை கூட ஐபிஎல் போட்டிகளில் கதி கலங்க வைத்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் சூர்யவன்ஷி நேற்றைய போட்டியிலும் 38 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்தின் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 500 ரன்கள் எடுத்த இளம் வயது வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை, 2018-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிடல்ஸ்) அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் தனது 20-வது வயதில் பதிவு செய்திருந்தார்.

* சூர்யவன்ஷி, ஒரு ஐபிஎல் சீசனில் குறைந்தது 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் அவர் அபாரமான 236.3 என்ற ஸ்டிரைக் ரேட்டை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், 2019-ஆம் ஆண்டு 204.8 ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்த ரஸ்சல் உள்ளார்.

* ஒரு ஐபிஎல் சீசனில் 50 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். தற்போது, 2026 சீசனில் அவர் மொத்தம் 53 சிக்சர்கள் அடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com