மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம்... வாஷிங்டன் ப்ரீடம் அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் வெற்றி

டோனோவன் பெரீரா 9 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அசத்தினார்.
image courtesy: twitter/@TexasSuperKings
image courtesy: twitter/@TexasSuperKings
Published on

புளோரிடா,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் புளோரிடாவில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. மழை காரணமாக 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வாஷிங்டன் ப்ரீடம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபம் 39 ரன்களும் (14 பந்துகள்), டோனோவன் பெரீரா 37 ரன்களும் (9 பந்துகள்) அடித்தனர்.

பின்னர் 88 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வாஷிங்டன் ப்ரீடம் அணியால் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் ப்ரீடம் தரப்பில் கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் அடித்தார். டோனோவன் பெரீரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com