டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் வெற்றி
x

28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.

திண்டுக்கல்,

9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் அஸ்வின் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சிவம் சிங் 37 ரன்கள் எடுத்தார். விமல் குமார் சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சர்ன், சரவணக்குமார் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களான வசீம் அகமது (11) ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் (9) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுஜய் சிவசங்கரன் 1 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 42 ரன்களிலும், முகிலேஷ் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

மறுபுறம் சஞ்சய் யாதவ் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 19.3 ஓவரில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் திருச்சி அணி பிளே-ஆப்க்குள் நுழைந்தது. சஞ்சய் யாதவ் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் சசி தரன், பெரியசாமி ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் வருண் சக்கரவர்த்தி, தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 More update

Next Story