டி.என்.பி.எல்.: சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
image courtesy:twitter/@TNPremierLeague
image courtesy:twitter/@TNPremierLeague
Published on

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதன் முதல் இரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சேலம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com