டிஎன்பிஎல்: திண்டுக்கல்லுக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெல்லை

இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டிஎன்பிஎல்: திண்டுக்கல்லுக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெல்லை
Published on

நெல்லை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதன் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் அருண் கார்த்திக் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நெல்லை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். கடைசி கட்டத்தில் ஹரிஷ்(42), சோனு யாதவ்(39) அதிரடியால் நெல்லை அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் அஸ்வின், பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்க உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com