முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இலங்கையிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை
Published on: 

லாகூர்,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

110 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பில் தில்ஷன் மதுஷங்கா அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை வெற்றி

இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், பவன் ரத்நாயக்கே ஆட்டமிழக்காமல் 23 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com