

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் இன்று சாமி தரிசனம் செய்தார்.
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையர் கோவிலின் நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.