

போர்ட் ஆப் ஸ்பெயின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரண்டன் கிங் 33 ரன்களுடனும், கவிம் ஹட்ஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.