முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டாஸ்

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியுள்ளது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங், டஜெனெரைன் சந்தர்பால் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com