

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சவுத்ஹாம்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் புரோகி ஹலிடே 40 ரன்களும், இசபெல் கசி 39 ரன்களும், மெடி கிரீன் 35 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் எலினி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஷிமினி சம்பல் 62 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார்.