மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு
Published on

லண்டன்,

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்

இதில் சவுத்ஹாம்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, நியூசிலாந்து களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நியூசிலாந்து 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com