

லண்டன்,
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி, தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 3-வது இடத்திலும், ஸ்காட்லாந்து அணி 4-வது இடத்திலும் உள்ளன.