ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் பின்னடைவு: நட்சத்திர வீரர்கள் காயம்

லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன.
ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் பின்னடைவு: நட்சத்திர வீரர்கள் காயம்
Published on

மாட்ரிட்,

ஸ்பெயினின் முன்னணி கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியின் நட்சத்திர வீரர்கள் அர்தா குலர் (Arda Guler) மற்றும் எடர் மிலிட்டாவோ (Eder Militao) ஆகியோர் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அலாவேஸ் அணிக்கு எதிரான போட்டியில் (ரியல் மாட்ரிட் 2-1 என வெற்றி), மிலிட்டாவோ மற்றும் குலர் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
வரலாற்று சாதனை: லிகா எப் பட்டத்தை 7-வது முறையாக தட்டித்தூக்கிய பார்சிலோனா
ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் பின்னடைவு: நட்சத்திர வீரர்கள் காயம்

கிளப் போட்டிகளில் இருந்து விலகினாலும், ஜூன் மாதம் தொடங்கவுள்ள 2026 உலகக்கோப்பைத் தொடருக்குள் இருவரும் குணமடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரேசில் அணிக்காக மிலிட்டாவோவும், துருக்கி அணிக்காக அர்தா குலரும் விளையாடுவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிகிறது.

ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து பேயர்ன் முனிச் அணியால் வெளியேற்றப்பட்ட ரியல் மாட்ரிட், தற்போது முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பதால் இந்த சீசனில் எந்தவொரு பெரிய கோப்பையும் வெல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com