ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி வெற்றி

நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி வெற்றி
Published on

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் இஷான் பண்டிதா ஆட்டத்தின் 88 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 5-வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா அணிகள் இரவு 7.30 மணி மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com