லா லிகா கால்பந்து போட்டியில் 35-வது முறையாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை

லா லிகா கால்பந்து போட்டியில் 35-வது முறையாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.
லா லிகா கால்பந்து போட்டியில் 35-வது முறையாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை
Published on

பார்சிலோனா,

ஸ்பெயினில், கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாலோர்கோவை பந்தாடியது. பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் 43-வது நிமிடத்தில் பின்வாக்கில் உதைத்த பந்து (பேக் ஹீல்) கோலுக்குள் நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இதே போல் பார்சிலோனா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி (17, 41, 83-வது நிமிடம்) ஹாட்ரிக் கோல் அடித்ததும் இந்த ஆட்டத்தில் இன்னொரு சிறப்பம்சமாகும். இது அவருக்கு 35-வது ஹாட்ரிக் ஆகும். இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் அதிக ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனை பட்டியலில் ரியல்மாட்ரிட் முன்னாள் வீரர் கிறிஸ்டியானா ரொனல்டோ 34 ஹாட்ரிக்குடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com