பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்?

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கம்?
Published on


* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மூன்று வடிவிலான போட்டிக்கும் சர்ப்ராஸ் அகமது இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதால் 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை புறக்கணிக்க உத்தேசித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவுக்கு முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புறக்கணிப்பு முடிவுக்கு பதிலாக துப்பாக்கி சுடுதல் பிரிவை காமன்வெல்த் போட்டியில் மீண்டும் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள ஹாக்கென்ஹீமில் நேற்று நடந்தது. இதில் மின்னல் வேகத்தில் காரை செலுத்திய நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார். நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com