இத்தாலி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வரெவ் 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் அரையிறுதியில் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com