இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரே ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 64 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதிடில் ஆண்ட்ரே ரூப்லெவ் 5-7,6-4, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மார்கோஸ் ஜிரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 32) முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com