இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 3-6, 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இறுதியில் ரூப்லெவ் 6-3, 3-6, 2-6 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com