இத்தாலி ஓபன் டென்னிஸ்; மரியா சக்காரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அசரென்கா

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளாக பெலாரசின் விக்டோரியா அசரென்கா கிரேக்க வீராங்கனையான மரியா சக்காரியை எதிர்கொண்டார்.

முன்னணி வீராங்கனைகள் மோதும் ஆட்டம் என்பதால் போட்டி பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்டத்தில் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்திய அசரென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா அசரென்கா அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com