இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ - மேட்டியோ அர்னால்டி இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்செஸ்கோ பாஸாரோ - மேட்டியோ அர்னால்டி இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com