புதுச்சேரி

தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல்

புதுவையில் தம்பதி உள்பட 3 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை சாரம் சுந்தரமூர்த்தி நகர் முத்துமாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 43). இவரது வீட்டருகே அனந்தராமன் என்பவர் மாடுகளை ரோட்டில் கட்டி வைத்து பால் கறந்து வியாபாரம் செய்துள்ளனர். மாட்டு சாணத்தை வாய்க்காலில் கொட்டியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாலாஜி நகராட்சிக்கு புகார் செய்தார். புகாரின்பேரில் நகராட்சி அதிகாரிகள் வந்து விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அனந்தராமன் மற்றும் 2 பேர் சேர்ந்து பாலாஜியை கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். அதை தடுக்க வந்த பாலாஜியின் மனவை புவனேஸ்வரி, உறவினர் மூர்த்தி ஆகியோரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து