மும்பை

நாலாச்சோப்ராவில் வாலிபர் அடித்து கொலை - 3 பேர் வெறிச்செயல்

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை அடித்து கொன்ற 3 பேர் கைது.

தினத்தந்தி

வசாய், 

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவில் கடந்த 9-ந்தேதி மாலை 4 மணி அளவில் ரோகித் யாதவ் (வயது20) என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது இவரது மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேர் ரோகித் யாதவை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை சராமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ரோகித் யாதவ் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோகித் யாதவ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை